பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 மணல் Rockfort Express குறிப்பிட்ட நேரத்துக்கு ஜங்ஷனை அடைந்துவிட்டது. கோபாலன் வந்திருக்கிறான். அது நடையா, ஒட்டமா? அதிலிருந்தே ఆర్మ్తో 6H 6) డET அடையாளம் கண்டு கொள்ளலாம். என்னிடமிருந்து பெட்டியையும் டெல்லிக் கூடையையும் பற்றிக்கொண் டான். நெற்றியில் உதிரி விபூதி, அவன் வராவிட்டால் என் பாடு கஷ்டம். திருச்சிக்கு நான் வந்து நான்கு வருடங்களுக்கு மேல் ஆச்சு. கோபாலனைப் பற்றி உங்களுக்குக் கூடத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், என் கதைத் தொகுதி உத்த ராயணம், கதைத் தலைப்பு அகிலா காண்க. அது கதையல்ல. கதை உருவில் அப்பட்டம். ஆட்டோ வீட்டுக்கெதிரே நின்றபோது, வாசலில் ப்ரேமா காத்துக்கொண்டிருந்தாள். "இன்னும் பத்து நிமிஷம்தான் இருக்கு!” கோபாலன் கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டான். கூடத்தில் ஒரு டைனிங் டேபிள், ஆறு நாற்காலிகள் கூடியிருக்கின்றன.