பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 : சிந்தாநதி பெற்றோரை மூன்று சுற்றுச் சுற்றியதால் பூப்பிரதட் சணம் செய்து பழத்தைப் பிள்ளையார் அடித்துவிட்ட தாகக் கதை, என் யாத்திரையும் இப்படித்தான். 女 ,烹 ★ கோபாலன் மெனக்கெட்டு என்னிடம் வருகிறான். "ஆபீசுக்குக் கிளம்பறேன். சுருக்க வந்தால் மணி அஞ்சு, நேரமானால் ஏழு.” அது என்ன நடையா? ஒட்டமா? என்னையறியாமல், ஒடும் ஜலத்தில் குடம் மெதுவாக அமிழ்வதுபோல், சிந்தனையில் அமிழ்கிறேன். இதுபோல், அம்மாவிடம் நான் சொல்லிக்கொண்டு போன பின்னர், இப்பத்தான். இருபது வருடங்கள் ஆகியிருக்குமா? அம்மாவே போயாச்சு. கண் ஈரத்தைக் கோபத்துடன் கசக்குகிறேன். சின்னச் சொல்தான். ஆனால், அதற்கு இவ்வளவு சக்தியா? நான் ஒரு பொட்டு’ எனும் தன்னுணர்வில் இத்தனை பலம் ஊறலா? 女 女 ★ சிந்தா மணியின் இன்ப ஒசைக்குச் சரியாக இதய சூரியன் புறப்பாடு. Word magic, ★ 责 ★ "எங்கே போகிறேன், எப்ப திரும்புவேன், எனக்கே தெரியாது.