பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 & சிந்தாநதி அப்புறமும், கட்டு அவிழ்க்கும்வரை, அவிழ்ந்த பின்னும் வாரம் ஒரு முறை, ஆறு வாரங்களுக்கு வந்து காண்பிக்க வேண்டும். நான்கு முறைகள் வந்து அழைத்துச் சென்று, மீண்டும் வீட்டில் கொண்டுவந்து விட்டான். ஐந்தாம் முறை- அவனுக்கு என்ன அசந்தர்ப்பமோ? அடுத்தும் வரவில்லை. அப்புறம்- வரவேயில்லை. என்னவானான்? உண்மையில் என் கண் ஆபரேஷன் அவனுடைய வெற்றி அல்லவா? மீதிக் காரியம் வேறு துணைக்கொண்டு ஒருவாறு முடிந்தது. அவன் வராத ஏக்கம், வருத்தத்திற்கு அப்பால், சூட்சும தடத்தில் கொக்கிகள் நீந்தின. உண்மையில் இவன், அல்லது இது யார்? என்ன செய்வது? அறியாமல், என் நூல் துனியை நான் அடைந்துவிட்ட சமயத்தில், என் விமோசனத்துக் காகவே, உயிரின் ஊர்கோலத்தினின்று வெளிப்பட்டு, எனக்குக் கண்ணைக் கொடுத்ததும், மீண்டும் வந்தவழியே போய் மறைந்து விட்ட சக்தி அம்சமா? தெய்வம் மனுஷ்யரூபேன: இவன் தங்கை கலியாணத்துக்குப் போனதால், மனதில் அடித்துக் கொண்ட சபலத்தின் சிறகுகள், கருணையின் அகண்ட சிறகுகளாக மாறி, மேல் இறங்கி கிருபை என்னே : சோதனைகள் தீரும் வேளை, விதம், வழி, மூலம்நமக்குக் காட்டாத மிஸ்டிக்குகள்.