பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 சிந்தாநதி ★ ★ ★ ஆகவே எழுபது. ஆச்சர்யக் குறிக்கு ஏதுமில்லை. ஆயினும் அறியாத ப்ரதேசத்தில் ஏதோ கோட்டை, மதில், ஸ்தூபிகளின் முகடுகள், அடர்ந்த பனிப் படலத்தி னுரடே எழுவது போன்று, அம்மா கையைப் பிடித்துக் கொள்ளணும் போன்று, ஏதோ அச்சம் தோன்றுகிறது. எழுபதின் வாசற்படியை மிதித்துவிட்டதால், நான் சரித்திரத்தைப் படைத்து விடவில்லை. வயதுக்கும் சரித்திரம் படைப்பதற்கும் சம்பந்தமில்லை. எழுபது? ஹஅம். மரத்தின் வயதை, அதன் சுழிகளைக் கொண்டு நிர்ணயிப்பதாம். என் சுழிகளை எண்ணினால், என்வரை எழுநூறு. A man is old as he feels. 女 女 女 போன வருடம் ஹோசூர் போயிருந்தபோது, ஒரு பெரியவரைப் பார்த்தேன்- சந்திக்கவில்லை. நூற்று ஐந்தாம். அப்படி ஒன்றும் ஒடுங்கிவிடவில்லை. சதா வெய்யிலில் குளிர் காய்ந்து கொண்டிருப்பார். நான் என் பிரயாணத்தில் புறப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன், கண்ணன், அவன் கடித வாக்கில் எழுதியிருந்தான். அவர் இறந்துவிட்டாராம். சேதி கண்டதும் ஸ்ன்னமான, ஆனால் கத்திக் கூர்மையில், ஒரு சில் மூச்சு என்மேல் வீசிற்று. பயணத்தினால் என்று அல்ல. ஆனால் எனக்குப் பழக்கப் படாத காற்று. இதுவரை பார்த்திராத ப்ரதேசத்தில் ஏதோ கோட்டை, மதில், ஸ்தூபிகளின் முகடு உயரத்தினின்று வருகிறதா? 丧 ★ 女