பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் : 275 கூடத்தில் இரண்டு பேர் கூட வந்தால் தோளோடு தோள் இடிக்காமல் திரும்ப முடியாது. ஈதெல்லாம் பின்னோக்கில் கதை சொல்லத்தான் சுவாரஸ்யம். நிகழ் நேரத்தில் சொல்லவும் முடியாது, மெல்லவும் முடியாது, இம்சை. வாழ் முறையில் திடீர்த் திடீரென, விலக்க முடியாதபடி, நேருக்கு நேர் நெருக்கத்தில், முகத்துக்கு முகம் க்ளோஸ்ப்" நேர்ந்தபடி, வளைய வந்து பாருங்கள்- உள்ளுர டென்ஷன் கட்டுவதற்கு வேறு காரணமே வேண்டாம். இந்த மஹாலுக்குள், ஒரு நாள், சிற்றப்பா ஒரு நாய்க்குட்டியைக் கொண்டு வந்தார், வளர்ப்பதற்கு. 'பார்ட்-டைம் செய்யுமிடத்தில் கொடுத்தானாம். என்னதான் புது ஜோடி ஆனாலும், மணாளனே மங்கையின் பாக்யமாக நினைக்கும் புதுக் கறுக்கு இன்னும் அழியவில்லை ஆனாலும், சிந்திக்கு இந்த அத்தியாயம் பிடிக்கவில்லை. "இருக்கும் இடம், பிழைப்பு நமக்கே திண்டாட்டமாக இருக்கையில் இந்த நாய் ஒன்று தான் குறைச்சலா?” என்று சொல்லிப் பார்த்தாள். ஆனால், அவரா கேட்பார்? எதிர்ப்பு என்றால் முரண்ட லுக்கு இன்னும் குஷியாச்சு. "இதென்ன ஜாதி தெரியுமா ?” “எனக்குத் தெரிய வேண்டாம். திருப்பிக் கொடுத் துக்கோ. இல்லே, தெருவில் விட்டுடுங்கோ.” "ஓஹோ, அதுக்குள் அவ்வளவு தூரத்துக்கு வந்துட் டியா? i am the Law here. நாய் இங்கேதான் இருக்கப் போறது. பிடிக்காதவா இங்கே விட்டுப் போயிடலாம். மனுஷாளைக் காட்டிலும் நாய் நன்றியுள்ள பிரா னின்னு சும்மாவா சொன்னான்?"