பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் : 277 கழுத்துப் பட்டை தளர இருந்தால், சில சமயங்களில் கழற்றிக்கொண்டு, எங்கள் கலத்தில் வாய் வைக்க வந்து விடும். என்னதான் எழுத்தாளானாலும், வாய் வைத்து வந்துவிடும் என்று சொல்ல அருவருப்பாயிருக்கே ! ஆனால், அது தான் நடந்தது. தவிர, கூடம் முழுக்க அது பண்ணின அசூயையை எடுத்தெறிவது யார்? நான்தான். நீங்கள்தான் பெரிய மனுஷாளாச்சே!” என்று சிற்றப்பா மாரைத் தட்டிக் கொண்டாலும், உழைக்கப் பன்னிரண்டு மணி நேரம் அவருக்குப் போதவில்லையே! காலையில் சைக்கிளில் போனால், சாப்பாட்டுக்குச் சில நிமிஷங்கள் எட்டிப் பார்த்துவிட்டு, ராத்திரி திரும்பும்போதுதான் கணக்கு, சிற்றப்பாவுக்கு ஞாயிற்றுக்கிழமை கிடையாது. நேரம் கிடைத்த சமயத்தில், குளிப்பாட்டலில் ஒரு வாரத்து அழுக்கு களைந்து சிற்றப்பாவின் கைகளினிடை யினின்று சடைகள் தும்பை வெளுப்பில் வெளிப்படுகை யில், அது மிக்க அழகுதான்- ஈரத்தை உதறியபடி குரைத்துக்கொண்டு, கூடத்தில் குறுக்கும் நெடுக்குமாக ஒடுகையில், Fido செல்லக் கண்ணுதான். - நாளடைவில் பலம் ஊறி, பூநிலை தாண்டிப் பாலிலிருந்து பிஸ்கட் கட்டத்துக்கு வந்தபின், அதிகத் தொந்தரவு இல்லே. எப்படியோ, ஒரு நாளைக்கு ஒரு வேளையேனும், சிற்றப்பா தன் நேரத்தில் திருடி, Fido வை வாக்கிங் அழைத்துச் செல்லத் தலைப்பட்ட பின், அதனின்று வெளிப்பட்ட பல அழகுகளில் எங்கள் எல்லா ருக்குமே, சித்தி உள்பட, அதன்மேல் பரிவு பொங்கிற்று. Fido இனி வெறும் பாலிலும் பிஸ்கட்டிலும் இருக்க முடியாது. கண்டிப்பாக அதற்கு இன்னும் திடமான உணவு தேவை. வாய்விட்டுச் சொல்லிக் கொள்ள வில்லை. ஆனால், இருக்கும் கீக்கிடத்தில் இதோ ஒரு புதுப் பிரச்சனை.