பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 & சிந்தாநதி எப்படித்தான் சிற்றப்பாவுக்கு அப்படி ஒரு குட்டி இரும்பு அடுப்பு, அதற்கேற்ற குட்டி மண் சட்டி கிடைத் ததோ? எடுத்துக்கொண்டு எல்லோருக்கும் பகிரங்கமாகத் தெரியும், ஈரம் கசிந்த ஒரு காகிதப் பொட்டலத்தை மறைத்துக்கொண்டு, மாடிக்குப் போய்விட்டார். ஆனால் நாங்களே காய்ச்ச இப்போ தயாராகிவிட்டோம். Fido, Such a likeable fessiow. கஷ்டம் இருந்து கொண்டேதான் இருக்கும். ஆனால், Qĝşairl-Jë@5 @@ @(5īšĝ5Ĝ35 ! Fido, littie brother. 京 ★ ★ சிற்றப்பா, Fidல், நான், என் தம்பி வாக்கிங், புறப்பட் டோம். ஊரோசை அடங்கிவிட்டது. நிலா பட்டை வீறிற்று. Fidoவை அதன் வாரினின்று கழற்றி ஆகி விட்டது. இஷ்டப்படி ஒடியாடித் திரிந்து அதன் ராஜ்யத்தை அனுபவித்துக்கொண்டிருந்தது. வழியெல்லாம் சிற்றப்பா புத்தி சொல்லிய வண்ணமாக இருந்தார். 'இதோ பார், நீ ஷார்ட்ஹாண்ட், 'பிராக்டீஸ், பண்றது போதாது. முதல் 'அட்டெம்ப்ட் டக்' அடிச்சிட்டே. நீ பாஸ் பண்ணியிருந்தால் இப்போ உத்தியோகமே ஏதேனும் கிடைச்சிருக்கும். குடும்பம் தத்தளிக்கிற தத்தளிப்பிலே, என்ன நேரம், பணம் வேஸ்ட்! எடுத்தவுடன் ஆபீஸர் வேலைக்குத்தான் போவேன் என்றால் முடியுமா?" - நான் ஒரு பாவத்தையும் அறியேன். ஒன்றும் சொன்னதுமில்லை. நினைத்ததுமில்லை. "கதை எழுதுறையாம் கதை, என்னடா எழுதறே? சன்மானம்னு எனக்குக் கொடுக்காட்டாப் போறே, கண்ணிலேயேனும் காட்டக் கூடாதா?”