பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 சிந்தாநதி இங்கே எங்கே நடு ரோட்டில் புதைப்பது? அதற்கு என்ன வசதி எங்களுக்கு இருக்கிறது? எந்நேரம் இப்படி நின்றோமோ? பெருமூச்செறிந்து சிற்றப்பா Pidoவைத் தூக்கி எதிரே corporation தொட்டி யில் போட்டுவிட்டு முன் நடக்க, சில அடிகள் தங்கி, நாங்கள் பின் தொடர்ந்தோம். இதுதான் வாழ்க்கை, நிidoவாக இருந்தால் என்ன, நாங்களாக இருந்தால் என்ன? பயன் தீர்ந்த பிறகு எங்கள் கதையும் இப்படித்தான். இப்படி நினைக்க எனக்கு வயது வந்துவிட்டது. பயமாயிருந்தது. சிவாவின் கையைத் துணைக்கு என் கை நாடிற்று. சிந்தா நதியில் ஒரு கலங்கல்!