பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் * 283 இதற்கு மூலமும் காரணமும் கேட்டால், மனோ தத்துவ நிபுணர்கள் ஹிஸ்டீரியா என்பார்கள். அல்லது ether உடன் சம்பந்தப்படுத்தலாம். அல்லது, எல்லாம் சொல்லக் கேள்விதானே என்று சூள் கொட்டலாம். காதில் பூ எல்லாம். சரி சரி. எனக்கும் சொல்லுக்கும் இந்த ஐம்பது வருட உறவில் ஆங்காங்கே சில சமயங்களில் அது பட்டாசுத் திரி ஆனால், அல்லது ஆடுவதாக நான் நினைத்துக்கொண் டால், அல்லது அப்படி ஆசைப்பட்டால், ஏதோவிட்ட குறை, தொட்ட குறை என்று சொல்லிக்கொள்ளலாம் அல்லவா? இத்தனையுமே வேண்டாமய்யா! அவர்கள் வழி வந்த எச்சம் நான். அதனாலேயே நான் எழுதத் தொடங்கிய நாளிலிருந்தே என் சுபாவத்திலேயே சொல்லைத் தேடல் இருந்திருக்கிறதென்று இப்போது உணர்கிறேன். சொல் என்றால் என் சொந்த பாஷை தமிழில் மட்டும் அல்ல. எனக்குத் தெரிந்த மறு பாஷை ஆங்கிலம் மட்டுமல்ல, என் சொல் எனும் என் கதி வாழ, எத்தனையோ கதிகள் பிடிக்க வேண்டியிருக் கிறது. - - குடும்பத்துக்கு என் கடமையின் கதி. ஊர் மெச்சப் பால் குடிக்கும் வழி சொல்லும் கதி. ஈச்ச மரத்தடியில் பால் குடித்துப் பேர் வாங்கிக் கட்டிக் கொள்ளும் கதி, ஊர் தெரிய ஒரு கதி. உள்ளுர ஒரு கதி. இத்தனைக்கும் அப்பால் என்னை இழுத்துச் செல்லும்