பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா, ச. ராமாமிருதம் : 285 சத்தியத்தின் நித்தியத்துவத்தினின்று ஒரு உகுப்பு, உகுப்பின் சத்தமற்ற சொட சொடப்பு. “தருண்யை நம:- லலிதா ஸஹஸ்ரநாமத்தில் இப்படி ஒரு அர்ச்சனை வருகிறது. தருணம்: சித்திரத்தின் கண் விழிப்பு: கல்லின் சிரக் கம்பம் சொல்லின் சக்தி. சொல் தருணத்தின் விந்து. ஒன்றுக்கொன்று சாஹலம். தருணத்தை நீடித்துத் தாங்க முடியாது. சொல் ஒன்று கிட்டிடில் அது என் பாக்கியம். தேவர் பந்தியில் ராகு திருட்டுத்தனமாக உட்கார்ந்தாற் போல் அமுதத்தை விழுங்கிவிட்டேன். சொல்லே, என்னைக் கொல், ஆனால் என்னை அழிக்க முடியாதே! புலி புலியெனக் கிலி, நிஜமாகவே புலி. இதுதான் சொல்லின் உறவோ? சிந்தா நதி ஆழத்துள் தலை மூழ்கி ஒரு தரிசனம்.