பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 ஒரு வைரம் சி.என். கே. ரோடில் வசித்துக்கொண்டிருக்கையில் வாசலில் ஜாப் டைப்பிங் பலகை தொங்க விட்டிருந் தேன். இந்தப் பலகை தொங்கிற்றே ஒழிய, நோக்கம் உருப்படியாக நிறைவேறவில்லை. நல்ல ஷகரில் இருக்க வேண்டும். அல்லது ஓரிரண்டு வக்கீல்களுடன் பழக்கம் தொடர்ந்து வேண்டும். அல்லது நான் வெளியே போய்ப் பேரம் பிடித்து வர வேண்டும். அதற்கு நேரமில்லை, சாமர்த்தியமுமில்லை. காலை 9.30 மணிக்கு வீட்டை விட்டுப் புறப்பட்டால், திரும்புவது மாலை 6-க்குக் குறை வதில்லை. நான் என்ன ஜாப் பண்ணி, வருமானத்தைக் கூட்டுவது, குடும்பத்தில் பொருளாதாரம் அப்போது நெருக்கடியான நிலைமை. ஒரு நாள், காலை வேளை, ஒரு சேட்ஜி அவசரமாக வந்தார். "இந்தப் பத்திரம் ஆவணும்." "ஆபீஸுக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். இன்னி சாயந்திரம்.” "நோ, நோ, அவஷரம் அவஷரம்- இப்பவே-" மேட்டரைப் புரட்டிப் பார்த்தேன். நிறையப் பக்கங்கள். சபலம் அடித்துக் கொண்டது. ஆபீஸுக்கு 'டோக்கர்’