பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா, ச. ராமாமிருதம் : 289 இப்படியா ஒரு கணக்கன் தொகை ரூ.17.3 கணக் கானால், அந்த ஒரு பைசாவை எப்படியேனும் தேடிக் கண்டுபிடித்து அப்போது ஒரு பைசா நாணயம் அமலில் இருந்தது- கணக்கைத் தீர்ப்பார். மாடியில், உண்மையான செல்வம் படைத்தவர்களின் அலகூதியத்தில், உடைமைகள் கவர்ச்சியான அலங் கோலத்தில் கிடக்கும். ஒரு சமயம், கட்டிலில் கிடந்த ஒரு சால்வையைத் தடவியபடி, "என்ன முன்னூறு நானு:று இருக்குமா?” என்று கேட்டான். புன்னகை புரிந்தார். "பத்து வர்ஷமாச்சு வாங்கி. அப்போ ஆயிரம் ரூபா. இப்ப என்னவோ? இப்ப இந்த க்வாலிட்டி கிடையாது.” அப்போதிலிருந்து, இதுபோன்ற அசட்டுக் கேள்வி களைக் கேட்பதை நிறுத்திக்கொண்டேன் (அங்கு மட்டுமல்ல. இதுவே ஒரு பாடம். சமையல்காரன், வேலைக்காரன், நர்ஸ். மாடியில் இளவரசு. கீழே அடிக்கஞ்சன். பகவன்தாஸுக்கு வருடம் பூரா ஆஸ்துமா. படுக்கை அறையில் எங்கு பார்த்தாலும் மருந்து சீசாக்கள், ஊசி மருந்துகள், மாத்திரைகள், துரக்க மாத்திரை சீசாக்கள், டானிக்குகள் (ப்ராந்தி), ஸானடோஜன் எல்லாம் சிதறிய படிதான். மாதத்தில் பாதி நாள் குளியல் தேறினால் அதிகம். மிச்சத்துக்கு சந்தன். அத்தர். ஒரு சமயம் அட்டாக் வந்து பார்த்தேன். சமயத்தில் நர்ஸ் இல்லை. அம்மாடியோவ்! காட்டுப் பூனை ஊளை யில் விலாவில் கட்டியிழுப்பும், அந்த விழிகள் வெளியே கொட்டிவிடும்போல் பிதுங்கலும் மடிமேல் தலையணை சி ந - 19