பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா.ச.ராமாமிருதம் : 291 இதனால் பகவன்தாஸ், தன் பிஸினெஸ்ஸில் பாதி, வீட்டில் பாதி எனக்கு எழுதிவிட்டார் என்று யாரேனும் நினைத்தால்- அதெல்லாம் டி.வி.யில் (சினிமா படுத்து விட்டதாம்!) - - - வீட்டில் கீழே நடு முற்றத்திலிருந்து வளர்ந்த வேப்ப மரம் மாடியில் ஜமக்காளம் விரித்தாற்போல். விருதா வாய்க் கொட்டிக்கொண்டிருந்த வேப்பம் பூவைக் கூட 'எடுத்துக்கொண்டு போ' என்று அவருக்குச் சொல்லத் தோன்றாது. - - வேப்பம் பூவை நெய்யில் பொன்னாக வறுத்து, சொற்ப உப்புக் கூட்டி, சாதத்தில் கலந்து இரண்டு கவளம்- வாயுவுக்கு நல்லது. (எனக்கு வாய்க்கு பஹல் ருசி!) - நானும் கேட்க மாட்டேன். "நாங்கள் பார்ட்டிஷனுக்கு முன்னால் ஸிந்திலிருந்து இங்கு வந்தோம். எனக்கு இருபது வயசுலே கண்ணாலம். அடுத்த வர்ஷமே. ஷம்ஷாரம் செத்துப் போச்சி. டெலிவரி, குளந்தை, அதுவும் பத்து நாளுல டைய்ட்” எழுந்து சென்று லேஃபைத் திறந்து (குங்குமப்பூ மனம் கும்!), லாக்கரைத் திறந்து, எதையோ எடுத்துக் கொண்டு, மறக்காமல் மூடிவிட்டு என்னிடம் வந்தார். கலர் கொடுத்த, ஒரு குழந்தையின் போட்டோ. ஒரே தவப்பிஞ்சு. குருத்தை ஊதிச் செடியாக்க முயன்ற பரிதாப கரமான கழைக்கூத்து முயற்சி. எந்தப் பின்னணியுமின்றிக் குழந்தை அந்தரத்தில் தொங்கிற்று. இன்னும் விளக்குப் பார்வை நிலைக்கவில்லை. இல்லை. ஒரேயடியர்க நிலைத்துவிட்டதா? லேசாக அருவருப்பு தட்டிற்று முகத்தை அவசரத்துடன் சரிபடுத்திக்கொண்டேன். அவர் என்னைப் பார்க்கவில்லை. பார்வை போட்டோவில்