பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 அவள் என்ன சத்தியம் மறந்தவளோ? ஆங்கரை, இங்கு வந்து எத்தனை நாட்களாயின.1 பதினைந்து வருடங்கள்! - லால்குடிக்கு வந்தாலும் இங்கு வர ஏனோ நேரமு மில்லை. காலும் வருவதில்லை. நடக்கவா செய்கிறோம்? பஸ்தானே ! - சந்தானம்: மாமா, கடைசியாக நீங்கள் இந்த வீட்டுக்கு வந்துபோன சமயத்தை மறக்கவே மாட்டேன். தற்செயலாக வந்தீர்கள், நீங்கள் பட்டணத்துக்கு அவசர மாகத்திரும்பும் வழியில், அம்மாவை, இதோ, இங்கே இதே இடத்தில்தான் கிடத்தியிருந்தது. கடைசி சுவாசம் கட்டியிழுத்துண் டிருந்தது. சித்திப் பாட்டி, அதான் உங்களுக்கு ஜானகிப் பெரி யம்மா, அழுதாள். பார்த்தியா. ராமாமிருதம், யாரும் சொல்லாமலே உன்னை இங்கே சமயத்துக்கு இழுத் துடுத்து! தொந்தம் விட்டுப் போமாடா சுந்தராவே அழைச்சுத்தான் நீ வந்தையோ என்னவோ? நெனப்பு