பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 & சிந்தாநதி தப்பறதுக்கு முன்னால் உன் பேரைச் சொல்லின் டிருந்தா' நீங்கள் கொண்டு வந்திருந்த பிரசாதம், பெருந்திரு அபிஷேக தீர்த்தத்தை அம்மா வாயில் ஊற்றினாள். கடை வாயில் வழியாமல் உள்ளே போயிடுத்து. நீங்கள் இருந்து பார்த்துட்டு அம்மா காலைத் தொட்டு கண்ணில் ஒத்திண்டு போயிட்டேள். அதுபற்றி ஒண்ணு மில்லே. உங்களுக்கு முன்னே பின்னே தெரியுமா? ஆபீஸ் ஜோலியா திருச்சிக்கு வந்த நேரத்தில் உங்கள் ஊருக்கு வந்திருக்கேள். கூடவே எங்களையும் எட்டிப் பார்த் திருக்கேள். ஆனால் சமயத்துக்கு நீங்கள் வந்து சேர்ந் தேளே, அந்த ஆச்சரியம் எனக்கு ஒயலே மாமா. இந்தத் தடவை நீங்கள் தங்கி இருந்துட்டுத்தான் போகனும். சொல்லிட்டேன்.” சாகும் தறுவாயின் கடைசி நினைப்பாகத் தங்க என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும்! இது போல முன்னும் பின்னும் இன்னும் இடங்களில் நேர்ந்திருக்கிறது. அதனாலேயே குற்றம் செய்துவிட்டதுபோல் நெஞ்சில் உறுத்தல். இந்தப் பதவிக்கு நான் லாயக்கா? இந்தத் தடவை நான் லால்குடி வந்தே நாலு வருடங் களுக்கு மேலாகிவிட்டது. முதலில் செலவு. இந்த ஒற்றைக் கண் பார்வையுடன் எங்கே தைரியமாகக் கிளம்புவது? பயம், தயக்கம், ஆயிரத் திட்டம், யோசனை ஒரு வருடமாக எனக்குள் நடக்கின்றன. எப்படியோ, இதோ, இங்கே இருக்கிறேன்.