பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 & சிந்தாநதி எனக்கு ஆறு வயதில், அண்ணா கையைப் பிடித்துக் கொண்டு, இவளை என் முதல் தரிசனத்தின்போது, அண்ணா: "இவள்தான்டா, இந்தக் கோவில்தான்டா, நமக்கிருக்கும் சொத்து!” - இந்த உரிமையை, என் மூதாதையர் அவரவர் தனித் தனித் தன்மையில் கொண்டாடி, இவளை எத்தனை முறை தரிசித்திருப்பார்! என் கொள்ளுத் தாத்தாவும் கொள்ளுப் பாட்டியும், அவர்கள் மண வாழ்க்கையில், ஒரு தினம் தவறாமல், அறுபது வருடங்களாக, கோவிலில் அர்த்த ஜாம தரிசனம் பண்ணிவிட்டு- அந்நாள் அந்த வேளை அசல் 12 மணி, அப்புறம்தான் ஆகாரமாம் (அது கஞ்சியோ, கூழோ, சோறோ, பழையதோ, பட்டினியோ- குடும்ப திசை அப்படி). "நீ கொடுத்தாலும் கொடுக்கா விட்டாலும், அடியே பாவி, நீதாண்டி கதி!" என்று திட்டிக் கொண்டேனும் அவள் காலை |கப் பற்றிக்கொண்டிருந்தார்கள். (தராமல் இருப்பாளோ அவள் என்ன சத்தியம் மறந்தவளோ:) : - என் தாத்தா இயற்றிய ஒரு பாட்டின் பல்லவி. அறுபது வருடங்கள், ஒருநாள் விடாது. நாலு வருடங்கள் கழித்து, இப்பவா, அப்புறமா என்று மீன மேஷம் பார்க்கிறவனாக, நாலாவது தலை முறை நான் ஆகிவிட்டேன். உன் சன்னிதானத்தில் வெட்கத்தில் குன்றிப் போகிறேன். என் விழியோரங்கள் தஹிக்கின்றன, தீபாராதனை ஒளியில், உன் விழிகளில் அன்றுபோல் இன்றும், அன்றுக்கும் முன் அவர்களுக்குக் காட்டினதே போல், என்றும் மாறாக் கருணையின் ததும்பலே, உன்