பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் 29 இவ்வளவு ஒசை இன்பத்துடன், மனத்துடன் சொல்லிக் கொடுத்த வார்த்தையா? இராது: Spontaneons ஆக, இந்த வாண்டினிடமிருந்து எப்படி வருகிறது? அப்பவே பாயசம், அதில் போடாத குங்குமப்பூவில், பரிமளித்தாற்போல் பிரமை தட்டிற்று. இன்னொரு சமயம், குழந்தை அம்மாவைக் கேட்கிறது. "அம்மா, இந்த மூக்கை (முறுக்கைத் தேந்து (திறந்து தாயேன்!” இதில் ஸ்வரச் சொல், திறந்து. இவை என் எழுத்துப் பிரயாசையில் நான் கோர்த்த ஜோடனைகள் அல்ல. தற்செயலில் செவியில் பட்டு, நினைவில் தைத்து, தைத்த இடத்தில் தங்கி, விண், விண், விண்...' குளவிகள். வாய்ச் சொல்லாகக் கண்ட பின்னர், வார்த்தை எழுத் தில் வடித்தாகிறது. வாய்ச் சொல்லுக்கும் முன்னாய உள்ளத்தின் எழுச்சியின் உக்கிரத்தை மழுப்பாமல் எழுத்தில் காப்பாற்றுவது எப்படி? இதுதான் தேடல். தேடல் என்றால் டிக்ஷனரியில் அல்ல. உன் விதியில் தேடு. பிற வாயிலாகப் பிறந்த வார்த்தைகளின் தனித் தன் மையை அதனதன் ஒசையினின்று தவிர்த்து, அதனதன் மோனத்தில் நிறுத்தி, த்வனியை அடையாளம் கண்டு கொண்டதும், த்வனி தீட்டும் மறு ஒவியங்கள் பயங்கும் மயக்கம். புலன் மாறாட்டத்தில் செவி பார்க்கும், கண் கேட்கும், உணர்வு மணக்கும். பாதங்களடியில் மணியாங்கற்களின் சரக் சரக் தருக்களின் இலைகளினுாடே, காற்றின் உஸ் 1.