உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் 31


கம்யூனிகேஷனில் எத்தனை விதங்கள், ஸ்வரங்கள், ஸ்ருதிகள், அதிர்வுகள், உருவங்கள், உருவகங்கள், நயங்கள், நயனங்கள்!

திடீர் திடீர் எனக் காரணம் தெரியா மகிழ்ச்சி. இனம் தெரியா-துக்கம். உடனே ஏக்கம்.

ராக் ரஞ்சித்.

ராக் துக்.

வரிகளை மடித்து எழுதினால் மட்டும்

பிராசத்தால் மட்டும்

கவிதை உண்டாகி விடாது. வசன கவிதை ஆகி விடாது.

கேட்கிறேன். உள்ளபடி கவிதைக்கும் வசளத்துக்கும் என்ன வேறுபாடு?

பொருளின் முலாம் ஓசையா? ஓசையையும் அடக்கித் தான் பொருளா?

ஓசைக்கும் பொருளுக்கும் நிக்கா மேல் இழுத்த திரைதான் வார்த்தை?

அது கவிதையோ வசனமோ எதுவானால் என்ன? எல்லாம் கவித்வமே.

கௌரி கல்யாண வை போ க மே

நித்ய கல்யாண வை போக மே

கவிதா கல்யாண வை போ க மே