பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 & சிந்தாநதி ':00, கி பாக். 2-50.” "இந்தாம்மா டீ, A- சரக்கு-என்னம்மா பார்க்கlங்க?" குண்டுக் கண் கடுத்து உடனே கனிஞ்சதை டிக்கெட் கொடுத்துப் பார்க்கலாம். புத்தகத்தைப் ‘படக்’னு மூடினார், "என்ன செட்டியார்வாள், எனக்கு டீ விலை ரூ. 2. அதே பொட்டலம், அதே ரகம் மாமாவுக்கு 2-50!” ரோசத்தில் என் குரல் தேம்பித்தோ என்னவோ? அவர் அமைதியா, "ஏம்மா, நீங்க காசைக் கொடுத் துட்டு டீ சாப்பிடlங்க, அவங்க குடிச்சிட்டுத்தானே கொடுக்கிறாங்க!” அன்னியிலேருந்து எனக்கு மனசு சரியில்லே மாமா. அம்மாடி! இன்னிக்கு சுமை இறங்கித்து, இனி உங்க பாடு.” -துடித்துப் போனேன் என்பது ஒரு பக்கம் இருக்கட் டும். கஜகர்ணம் கோகர்ணம் போட்டு, எப்படியோ புரட்டி, அடுத்த நாளே, செட்டியார் பற்றைப் பூரா அடைத்தேன் என்பது வேறு கதை. அன்றிலிருந்து ரொக்கம். காசில்லேன்னா அந்த சாமான் இல்லாம லேயே நடக்கட்டும். உத்தரவு போட்டு விட்டேன். ஆச்சு, முப்பது வருடங்களுக்கு மேல். இது எல்லாமே கிடக்கட்டும். அன்று செட்டியார் பேசினது நியாயமோ, நான யமோ, கேலியோ- ஆனால் சந்தேகமில்லாமல் இலக்கி யம். என்ன கச்சிதம், ஸ்வரக்கட்டு, லயம், என்ன அர்த்த வீச்சு! இன்னும் வியக்கிறேன். “சுரீல்-ஒரு பொறி