இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
லா. ச. ராமாமிருதம் ❖37
-ஒரு முள் தைப்பு
-ஒரு பாம்புப் பிடுங்கல்
லா.ச.ராமாமிருதம் 37
-ஒரு வார்த்தையில், ஒரு சைகையில், ஒரு திருப்பத்தையே ஏற்படுத்தக்கூடிய உபதேச மந்த்ரம் இப்படித்தான் அமையுமோ?
சிந்தா நதியில் தண்ணீர் எப்பவுமே பளிங்கல்ல. உச்சி வெய்யிலுக்கு, கக்கல் கரைசல், பாசி, கும்மி, அழுகிய தழை, இலை, வேரோடு பிடுங்கிக்கொண்ட கோரை, எல்லாம் மிதக்க, கலங்கலாயும் வரும் போலும்!