பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Gиотதிரத்தைக் காணோம். எப்படி? இரவு, படுக்கு முன், சில சமயங்களில் கழற்றி, தலையணை உறையுள் போட்டுவிடுவேன். மறுநாள், எழுந்து, தலையணையை உதறினதும், மோதிரம் தரையில் க்ளிங்’ என்று விழுகையில், நினைவில் ஏதேதோ எனக்கே சொந்தம் எதிரொலிகள் எழும். சங்கராந்தியுமதுவுமாய் மோதிரத்தைக் காணோம். ஆனால் தாமதமாகத்தான் ஞாபகம் வந்தது. ஸ்நானத் துக்கு ஏற்பாடு பண்ணிக் கொண்டிருக்கையில், விரலின் வெறிச்சைப் பார்த்ததும், தன் அறைக்குப் போய் சுருட் டின படுக்கையை விரித்து, தலையணையை உதறினால்"ப்ளாங்.இ.” உடல் வெலவெலத்து அங்கேயே உட்கார்ந்துவிட்டது. எப்படி, என்ன, ஏது ஆகியிருக்கும்? வெகு நாளாகவே என் அறை, படுக்கை, சாப்பாடு முறை, வேளை கூடத் தனி இளவட்டத்தின் இரைச்சல்பேச்சுத் தளம் ஒவ்வவில்லை. ஈடு கொடுக்க முடிய வில்லை. என் அறைதான் எனக்கு அடைக்கலம். பிறர் நடமாட்டத்துக்கு அதிகம் ஏதுவில்லை. என் புத்தகங் களை யார் எடுத்துப் படிக்கப் போகிறார்கள் ?