பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 சிந்தாநதி அத்தனையும் கிசுகிசு. ஆனால் என் செவி படணும். நான் சூளையில் வெந்து கொண்டிருக்கிறேன். கனுவன்று கன்னியம்மா நோட்டீஸ் கொடுத்து விட்டாள். மாமியாரும் புருசனும் கூட்டிப் போக நேரே வந்திருக்காங்களாம். 'குடிகாரனோ, கொலைகாரனோ, என் இடம் அங்கேதானேம்மா.: தை பிறந்திருக்குது. எனக்கு வழி விடுது-” ஒஹோ, அப்படியா? பலே கைக்காரிதான். காரியம் முடிந்ததும். Knack-ஆ கழன்றுகொள்கிறாளா? ஆனால் ஜாடையாகக்கூடக் கேட்க முடியுமோ? புருஷனை அவள் அழைத்து வந்து விட்டால், அவ்வளவுதான், என்னை அக்கு வேறு ஆணி வேறாகக் கழட்டி விடுவானே கேட்க வேண்டிய சமயத்தைக் கோட்டை விட்டாச்சு. இனி அவ்வளவுதான். இனி என்ன ? ★ 次 ★ வீட்டுக்குத் தென் புற முள்வேலி யை ஒட்டிப் புல்தரையில் உட்கார்ந்திருக்கிறேன். -ஒரு thesis டைப் அடித்துக் கொடுத்ததற்குக் கிடைத்த ஊதியத்தை, அம்மா சொற்படி, (உருப்படியா பண் னிக்கோ, குடும்பம்தான் எப்பவுமே இருக்கு, எத்தனை வந்தாலும் போறாது!) அப்படியே பண்ணி, அம்மா கையில் கொடுத்து, வாங்கி, விரலிலேறி ஆச்சு இன்று இருபத்து ஏழு வருஷங்களுக்கு மேல். அம்மா காலமும் ஆயாச்சு. மோதிரமும் போயாச்சு. இனி என்ன ! கரனையா ஒரு பவுன். ஆனால் அதன் மதிப்பு அதன் ^. தங்கத்தில் அல்ல.