பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 & சிந்தாநதி இந்த சமயம் உலகமே என் உள்ளங்கையில் ஒரு லேகிய உருண்டை. அம்மாவின் ரrைக்கு சாr வேற வேணுமா? உன் ஆவாஹனத்துக்கு ஏற்றபடி உன் அபிமானம். அபிமானத்துக்கேற்றபடி அருள். "என்ன வேலைக்காரியோ, என்ன பெருக்கறாளோ? பத்து நாள் முத்து மழை பேஞ்சு, ஒரு பழம் புடவையும் புது ரவிக்கையும் பிடுங்கிண்டு போனதோடு சரி. இன்னிக்கு உங்கள் புஸ்தக ஷெல்படியில் வாருகலைக் கொடுத்துப் பெருக்கறேன். கலம் குப்பையோடு இதுவும்எல்லாம் நான் பார்த்தால்தான் உண்டு. நான் செஞ்சால் தான் உண்டு.” - அரற்றுவதோடு சரி. எலியுடன் பூனை விளையாட் டின் நுண்ணிய கொடுரம் அறியாள். வெகுளி, படுக்கையைச் சுருட்டி வைக்கையில், கண்ணுக்குத் தெரியாமல், காதுக்கும் கேட்காமல் எப்படியோ நழுவி விழுந்து உருண்டோடி, ஒளிந்துகொண்டு, எனக்கு 'ஜூட் காட்டி, என்னை அம்பேல் ஆக்கிவிட்டது. கன்னியம்மா, உன் ஊழல் காரியத்துக்கு நன்றி. என் ஸ்கியே, உன் புலம்பலுக்கு நன்றி. பொங்கலோ பொங்கல்! சிந்தா நதியில் ஒரு சுழி. 令 3. 令 o கு