பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 & சிந்தாநதி ஆனால் நான் சிந்தனைக்கு அர்ச்சனை. இதன் புதிர் என்ன? 禽 ★ 寅 அர்ச்சனை யெனும் சொல். ராமன், கிருஷ்ணன், ரிஷிகள், புத்தர், சங்கரர், நபி, FrTégu-siv, Zorasther, Confucius, Guus, ErršS LZ) SurrS Supermen. இதுவரை தோன்றி, அவ்வப்போது இனியும் தோன்றப் போவோர் யாவரும் சிருஷ்டியின் கடையலில் உண்டாகி, இயங்கி, அவரவர் சொல்லைச் சொல்லி யானதும் அதிலேயே மறைந்தவர்தாம். சிந்தனையெனும் சிருஷ்டி, சிந்தனைக்கென்றே ஒரு தகவிணாமூர்த்தியைப் படைத்தேன். அவனே சிவன்; அவனே தவன். சிந்தனையெனும் தவம். சிந்தனையின் படுக்கையில் அவன் ஆழ்ந்து கிடக்கும் இடமும் ஆழமும் அவனே அறியான். எங்கு இருக்கிறேன்? எங்கிருந்து வந்தேன்? ஏன் வந்தேன்? சிந்தனா நதியில் அவன் முகத்துக்குக் காத்துக் கிடக்கிறான். மொழி முத்து. முத்தான சொல். எழுத்தாய்க் கோர்த்த சொல் எனும் ஜபமணி. சொல் எனும் உருவேற்றம்.

  • ★ ★

எப்பவோ நான் என்று ஒரு கட்டுரை எழுதினேன். அதில் எழுத்து வாக்கில் ஒரு சொற்றொடர்.