பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 & சிந்தாநதி வயதில் எங்கள் இருவருக்குமிடையே ஒரு தலை முறையே முழுமையாக உருவாகியிருந்தது. அதே முகம், ஒரு சுருக்கம் கூடக் கிடையாது. பாஸ்கருக்குக் கண்கள் எப்பவுமே அழகு. மான் விழி. உடல்தான் தடித்து விட்டது. நெல்லுக்கு முனை கிள்ளி விட்டாற்போல், உச்சரிப்பில், அதே லேசான கொச்சைக் குரலில், பாஷை யில் அதே மிருது, எங்கள் சந்தோஷத்திற்கும், பேச விஷயங்களுக்கும், பரிமாறல்களுக்கும் கேட்கணுமா? கடல் போலும் வீடு. மூன்று பிள்ளைகளும், சம்சாரங் களும் தவிர, சுற்றம், போவோர், வருவோர் சந்தடிநாடி ஸ்வச்சமாகத் தெரிந்தது. பயணத்தின் வசதிகள் அனைத் தும் தெரிந்தன. இந்த தினப்படி உற்சவத்தில் அத்தனை வசதிகளும் தேவைதான் என்றும் தெரிந்தது. வயிற்றுப் பாடின் எதிர் நீச்சலின், ஒரே சமயத்தில் பல லைன்களில் Sales Representative ஆக, ஒரு தோல் பையைத் துரக்கிக்கொண்டு, படிப்படியாக ஏறி இறங்கி வந்த அந்த நாள் பாஸ்கருக்கு இவர் எங்கே? இப்போது பாஸ்கர் சொந்த பிஸினெஸ் பண்ணிக் கொண்டிருந்தார். அது சம்பந்தப்பட்ட வியாபாரி சங்கத் தின் காரியதரிசியும்கூட வசதி, க்ஷேமம், பதவி மூன்றும் கூடிவிட்டன. "உலகம் ஒரு பிரமாண்ட நரம்பு லிஸ்டம். எங்கே தட்டினாலும் விதிர் விதிர்ப்பு எவ்வளவு தூரம் பரவுகிறது! இல்லாவிட்டால், முப்பது வருடங்கள் கழித்து நாம் இப்படிச் சந்திக்க முடியுமா? விட்ட இடத்தில் இருந்து மறுபடியும் தொட்டுக்கொள்ள முடியுமா?” என் கையைப் பிடித்துப் பட்சத்துடன் அமுக் கினார். "இத்துடன் நான் சொன்ன வேரோட்ட பலம் இருக்கும் வரை, மற்ற மற்ற முரண்பாடுகள் எல்லாம் §hairsøré àgirar Gjaguiãogit. Time marches on."