பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் & 49 'காலத்துக்குத் தக்கபடி நியதி மாறுகிறது. நம் நியா யங்கள் இப்போ பொருந்தா நாம் நம் முன்னோர்களின் வாரிசுகள் என்பது நம்முடைய தத்துவம். கொடு, கொடு, கொடுத்துக் கொண்டேயிரு-நம் கோட்பாடு கொடுப்ப தற்கு அப்போ இருந்தது. கொடு என்பதில் நான் எல்லாவற்றையும்தான் சேர்த்துக்கொள்கிறேன்; அன்பு, பாசம், பிரியம், தியாகம், So on. ஆனால் வாழ்க்கை ஒரு நீண்ட அவசரமாகி விட்ட பின், அவனவன் அவனவ னுக்கே பற்றிக்கொள்ள முடிந்தவரை பற்றிக்கொள்- இது வாழ்க்கை முறையாகவே ஆகிவிட்டது. மிஞ்சத் தக்கவன் தான் எஞ்ச முடியும் எனும் இந்த rat raceஇல் இளைய தலைமுறை என்னதான் செய்யும்! அவர்களுக்கு மனம் இல்லை என்று சொல்ல மாட்டேன். அவர்களால் முடிந்ததைக் கொடுக்கிறார்கள். கொடுக்கிறது என்பதில் நான் எல்லாவற்றையும்தான் மடக்குகிறேன். அன்பு, பாசம், பிரியம், நேசம் So on. ஆனால் நமக்குப் பங்கு குறைந்துபோய்விட்டது; குறையத்தான் செய்யும். பங்கு தாரர்கள் கூடிவிட்டார்கள். சரக்கும் குறைந்து போச்சு. இந்த உண்மையைத் தெரிந்துகொண்டால் அத்துடன் நாம் சமாதானமானால் வாழ வழி. இல்லையேல் eேneration Gap, குற்றம் குறை. கொடுப்பதென்றால் அதன் வீச்சு நம் பிள்ளைகளுக்குத் தெரியாது.” “ஏண்டா பாஸ்கர், வேட்டியை இன்னும் விழுத்துப் போடல்லியா? எப்போ தோய்ச்சு எப்போ காயறது ?" வாசற்படியில் ஒரு கிழவி நின்றாள். 70, 75 உடல் வற்றி புடவை கொம்புக் கிளையில் மாட்டினாற்போல் ஆங்காங்கே தொங்கிற்று. பாஸ்கர் எழுந்து நின்றார். அமைதியாக, அன்பாக, "இதோ வந்துட்டேன் அம்மா." & я - 4