பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 & சிந்தாநதி அம்மாவா? இவளா? வேளைக்காரி என்று சொல்லா மலே தெரிகிறதே! "இந்த மகன் யாரு?" "இவரை உனக்குத் தெரியாது. ரொம்ப வேண்டியவர். "சுருக்க விழுத்துப் போடுடா. பேச்சுக்கு ஆள் அகப் பட்டா போதும். தோச்சுப் போட்டுட்டு நான் கட்டை யைச் சத்தே நீட்ட வேணாமா?” பின்வாங்கி, வீட்டைச் சுற்றிக்கொண்டு, புழக்கடைப் பக்கம் சென்றாள். என் முகத்தின் திணறலுக்குப் பாஸ்கர் புன்னகை புரிந்தார். நாற்காலியில் சாயந்து கொண்டார். "இவளுக்குக் கலியாணமான கையுடன், வேலை செய்ய எங்கள் வீட்டுக்கு இவள் வந்தபோது, என் தாயார் என்னைக் கர்ப்பமாயிருந்தாள். அம்மா சமையல் பண்ணிக்கொண்டிருக்கையில், சமையலறையிலேயே திடீரென்று நான் அவதாரமாகி விட்டேன். இவங்க ரெண்டு பேரைத் தவிர வீட்டில் யாருமில்லை. கூடத்துக் குக் கூட்டிப் போகவோ, ஒரு விரிப்புக்கோசுட நேர மில்லை. ஆகவே என்னைப் பிரசவம் பார்த்தவளே இவள்தான். அத்தோடு நிற்கவில்லை. அடுத்து வந்த தம்பி, அப்புறம் தங்கை, மறுபடியும் தம்பி, மறுபடியும் தங்கைஅந்த நெருக்கடி நேராவிட்டாலும் இவள்தான் மருத்துவம். ஆகவே இவள் Status தனிப்பட்டது. அம்மா வேலைக்குப் போய்க்கொண்டிருந்தாள். ஆகவே இவள் தான் எங்களை வளர்ந்தாள். என் மூக்கை எத்தனை தரம் சிந்திப்போட்டிருப்பாள். இவளிடம் எத்தனை உதை வாங்கியிருப்பேன். எத்தனை தரம் எடுத்து விட்டிருக் கிறாள்!" அவர் குரலில் பெருமிதம் ஒலித்தது. ஆம், இவளுக்கும் குழந்தை குட்டிகள் இருக்கிறார்கள், நிறைய.