பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்படியில்லை. தெரிந்தவரோ தெரியாதவரோ வேண் டியவரோ வேண்டாதவரோ எல்லாரும் சந்தோஷமா யிருக்க வேண்டாமா? சரி, உன் கார்த்த வீரியார்ச்சுனக் கரங்களால் அகிலத் தையே அனைத்துக் கொள்ளேன்! ஆஷாட பூதி! என்னிடமிருந்தே நான் வாங்கிக் கட்டிக் கொள்ளு மளவுக்கு அட, போதாத காலம் இப்படியும் இருக்க முடியுமா ? ஏதோ குருட்டு யோசனையில் என்னை இழந்ததேன். எதற்கும் முதன்முறை, அந்த ஒரு முறையோடு சரி. அதன் மறுமுறைகள், மீண்டும் மீண்டும் முதன்முறையின் பலவந்தம் கற்பழிப்பு; தூய்மையின் உன்னதம் இச்சை யாய் இழிந்து, பழகிப் பழகிப் பச்சையாகி, படிப்படி யாகப் பச்சையும் நச்சாகி, நச்சோடு வாழும் இந்த வாழ்வும் வாழ்வா? சரி, என்ன தான் வழி? இதென்ன வெறும் சொல்வித்தையா? செயலின் திசை தப்பலா? உயிரின் திரந்தர மானபங்கமே வாழ்க்கையின் தத்துவமா? 'ரொய்.ஞ்.ஞ்.ஞ்.” ஒரு பெரிய வண்டு வர வரக் குறுகும் வட்டத்தில், என்னைச் சுற்றி, அந்தரத்தில் நீந்திற்று. வெய்யில், தாலாட்டு மாதிரி கண் செருகிற்று. ஒழித்துப் பெருக்கும் வேளை, விசன வேளைதான். எதையும் ஒதுக்க முடியவில்லை. ஏதோ வகையில் யாவும் மானச் சின்னங்கல், முதன் முறையின் சாஷிகள். அள்ளி மீண்டும் பெட்டியில் போடுகிறேன். அந்த அள்ளலிலிருந்து இரண்டு பத்திரிகைகள், ஒலைச்சுவடி உருவத்தில், பட்டு நாடாக்கள் கோர்த்து, மடியில் விழுகின்றன. இதுவரை பார்த்த ஞாபகம் இல்லையே! வியப்புடன் எடுக்கிறேன்.