பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 கடைசி. ஒருநாள், தினமணி கதிர் காரியாலயத்துக்குச் சென்றிருந்தபோது, ஆசிரியர், "வாரம் இரண்டு பக்கங்கள் உங்களுக்காக ஒதுக்குகிறேன், எழுதுங்களேன்" என்றார்.

நான்: 'எதைப் பற்றி?

ஆசிரியர்: 'பூமிமேல் எதுபற்றி வேனுமானாலும்; உங்களுக்குத் தோன்றியபடி:

தாரளமான ஆர்டர்தான்

நான்: ‘'இப்பத்தான் உங்கள் சிப்பந்தி, கதிருக்கு வந்த கடிதம் ஒன்றைக் காண்பித்தார். லா.ச.ரா. என்னத்தை எழுதுகிறார்? ஒன்றுமே புரியவில்லை. மண்டையைப் பிய்த்துக்கொள்ளலாம் போலிருக்கிறது. அப்படியுமா என்னை எழுதச் சொல்கிறீர்கள்?"

ஆசிரியர்: "பிய்த்துக் கொள்ளட்டுமே! இரண்டு பக்கங்கள்தானே !"

ஒரு சிறுகதை எழுதவே, சாதாரணமாக மூணு மாதங்கள் எடுத்துக்கொள்ளும் எனக்கு, கதிரின் அச்சு