பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 & சிந்தாநதி இவர்கள் அனைவரிலும் இனிமேலவரிலும் எனக்கு என் பங்கு உண்டு. திரும்பத் திரும்ப இந்த நினைவு கூட்டலில், கால அளவில் கூட்டலின் திரட்சியில் ஏதேனும் ஒரு சமயம் திரட்சியின் சிதறலில் நான் ஒரு சிதறாக இவர்களுடன் அமரத்துவம் எய்திடுவேன். நாயக பாவத்தின் பதவி அப்படிப்பட்டது. நாயக பாவமில்லாவிடின், அதன் தனித்தனி விதத் தடங்களில் தெய்வங்கள் ஏது ? தெய்வங்கள் வேண்டும். தெய்வீகம் அறியோம். தெய்வீகம்: முக்தியின் வெட்ட வெளி, தெய்வங்கள் எனும் உச்சத்தடக் கதாநாயகர்கள் உருவாகும், உருவாக் கும் பட்டறை. அனுபவம், பாஷை, நினைவு கூட்டலின் முக்கூடல். முக்கூடலின் ரவலாயனத்தில் நேர்ந்த பூகம்பத்தின் சித்தி, கதை கதையாம் காரணமாம். நினைவு கூட்டல், திரும்ப நினைவு கூட்டல், நினைவு கூட்டலே, உன் மறு பெயர் தியானம். கதை, கற்பனை. inspiration நடப்பு. வெளி உலகம், உள் உலகம், இனி உலகம், கலை, காலம், முகம்- இன்னும் சொல்ல விட்டவை அனைத்தையும் அகப்பை அகப்பையாகச் சொரிந்து, தியானத்தின் தீராப் பசிக்குத் தீனி தியானமெனும் தீ, ஸர்வ கபளிகரி. 女 责 女 நினைவில் தீ நடுவில் அமர்ந்தேன். வெல்லத்தைக் காய்ச்சக் காய்ச்சப் பாகாய்க் கெட்டிப் படுகிறது. சாந்தைக் கூட்டக் கூட்டச் சாந்து கெட்டிப்படுகிறது. நினைவைக் கூட்டக் கூட்ட நினைவு இறுகுகிறது.