பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் * 61 மறு உருவங்கள், மறு மறு உருக்கள் உருகி உருகி, இறுக இறுக ஒரு உருவாகி ஒரே உருவாகிக் கொண்டிருக் கும் பாகின் த்ரில்- பிந்து ஸாரம், பிந்து மகிழ்ச்சி, ராகம் பிந்துமாலினி. இருளில் கன்னத்தில் ஒரு முத்தம் யார் தந்தது; அனுப வம் சொல்ல முடியாது. சொல்வதற்கில்லை, யாரிடம் சொல்வேன்? யார் முத்தம் என்று தெரிவேன்? நினைவு பித்தடிக்கிறது. 女 女 * தியானமே உன் கதையென்ன? ஒ, மெளனம் உன் இயல்பல்லவா? என் பேச்சை உதவுகிறேன். எனக்காகப் பேசி உன் கதையைச் சொல்லமாட்டாயா? "சொல்ல என்ன இருக்கிறது, நான் வேறேதுமில்லை. உன் இசையில் உன் ஈடுபாடு. ஈடுபாடில் பாகுபாடு. பாகுபாடில் இழைபாடு. இழைபாடின் வழிபாடு, இழைபாடே வழிபாடு. வழிபாடே இழைபாடு. தியானேச்வரத்தில் நான் வஜ்ரேச்வரன் ஆனால், ஒரு நாள் ஆகையில், பிந்துமாலினி என் தியானேஸ்வரி வருவாள். இருளில் அவள் முகத்தைத் தருவாள். முத்தம் அடிக்கும் பித்தே முத்தியின் வெட்ட வெளிக்குச் சாவி. முத்தி வேண்டாம். தியானம் ஒரு புஷ்பம். நேற்று அவள் கூந்தலில் செருகிய மலராகி மனத்தேன். இன்று நிர்மாலியாகி, நேற்றைய நினைவின் மணத்துடன் உதிர்ந்து கொண் டிருக்கிறேன்- சிந்தா நதியில். “என்ன அத்தனையும் பேத்தல், வார்த்தைகளின் பம்மாத்து!” ரொம்ப சரி. அத்தனையும் தூக்கி எறி, சிந்தா நதியில். 念 兹 冷 శి• వ్య 领