பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 ஒரு யாத்திரை முப்பத்து ஐந்து வருடங்களுக்கு முன், என் எழுத்தின் பாதிப்புக் காரணமாக எனக்கு ஒரு நண்பர் குழு சேர்ந்தது. கொத்தாக நாலு பேர். தாத்து, மாசு, செல்லம், வரதராஜன். இப்போதைய நிலவரம் தாத்து காலமாகி விட்டார். உத்யோக ரீதியில் செல்லம் எங்கேயோ? மாசுவும் வரதராஜனும் சென்னையில் இருப்பதால் தொடர்பு அறியவில்லை. அப்படியும் நானும் வரதராஜ னும் சந்தித்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது. வரதராஜன்- அதான் நா. சி. வரதராஜன் கவிஞர். 'பீஷ்மன் என்கிற புனைபெயரில் கதைக்ஞர். இவர்களுக்குள் நான்தான் மூத்தவன். அவர்களி டையே அவர்கள் ஏறக்குறைய ஒரே வயதினர். எல்லோ ருக்கும் பூர்வீகம் வில்லிப்புத்துரர். சிறு வயதிலிருந்தே ஒன்றாக வளர்ந்தவர். கொத்தாக ஒரே இடத்தில் குடியிருந்தனர். வரதராஜன் மட்டும் சிந்தாதிரிப்பேட்டையில். மாசு, நான் இன்னும் படித்து முடிக்க முடியாத ஒரு தனிப் புத்தகம். அவர் தன்மைக்கு இரண்டு மாதிரிகள் மட்டும் காட்டி நிறுத்திக் கொள்கிறேன்.