பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#3 நேர்த்தியின் நியதிகள் அன்று என் பெட்டியைக் குடைகையில் ஒ, பெட்டியைக் குடைவதற்கு எனக்கு வேளை, பொழுதே வேண்டாம். அது என் அவமானம். ஆனால் கூடவே பழக்கமாகவும் படிந்துவிட்டது. வேடிக்கை. அதில் தேடிய பொருள் அதில் கிடைப்பதில்லை. சந்தியாவந்தனப் புத்தகத்தைப் பெட்டியில் தேடினால் அது அரிசிப் பீப்பாயில், அரைப்படிக்குள் ஒளிந்துகொண் டிருக்கும். எப்படி? அதுதான் இந்த வீட்டில் கேட்கப் படாது. அதேபோல, என் பெட்டியில் ஒன்று தேடப் போய், ஒன்று கிடைக்கும் விந்தைக்கு என்ன பதில் : அதிசயம் (Miracle) என்றே சொல்லணும். உள் ஆழத்தில் எங்கோ கிடந்துவிட்டு, மேலே மிதக்க அதற்கு இப்போ வேளை வந்ததா, அல்ல, தன் உயிரில், தன் எண்ணத்தில் சுயமாக இயங்குகிறதா? ஒரு குறிப்பு. எப்போவோ எழுதினது. என் இதயத் துக்கு அப்போது ஒப்படைத்த அந்தரங்கம். எந்த எழுத்துமே அந்தரங்கம்தான். எழுத்தாகிவிட்ட பின் கிழிக்க எனக்கு மனம் வருவ தில்லை. இது என் பலவீனமா, பலமா? இத்தனை வருடங் களுக்குப் பின் இதோ என் இழுத்து, சாகூவிக்கூண்டில்