பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 : சிந்தாநதி வாக்குமூலம் சொல்கிறது. இதன்மூலம் எனக்கு முள் கிரீடமா? தலையைச் சுற்றிப் புஷ்பச் சரமா? நேர்த்தியின் நியதிகள் 1 தினம் சுத்தமான ஆடை அணிக (எளிமையான உடை) வீட்டுள்: பனியன், வேட்டி. (பனியன் தேவையா) வெளியே: குர்த்தா, பனியன், வேட்டி. 2. மெருகு பழகிய குரலும், பேச்சில் தன்மையும், இரண்டும் சத்தம் உயராதபடி பார்த்துக்கொள்க. இரைச்சலே விரலம். 3. எப்பவும் குறைந்தபட்சப் பேச்சு (முடியுமா?) 4. உணவு: குறைந்தபட்ச உட்கொளல்: குறைந்தபட்சத் தடவைகள். காலைச் சாப்பாடு: வாழையிலையில்- கட்டுப்படி ஆகவில்லை. இரவு: சாப்பாடு வேண்டாம்; ஒரு தம்பளர் கஞ்சி. சிற்றுண்டி: தவிர்க்க. நாக்குக்கும், வயிற்றுக்கும் ஓயாத போராட்டத்தில் அனுபவத்துக்கு முழுக்கக் கைவரவில்லை. நாக்கு உணக்கையும், காரமும் கேட்கிறது. குடல் இரண்டுக் கும் அஞ்சிச் சுருங்குகிறது. நாக்கே வெற்றி கொள் கிறது. வயிறு பலனை அனுபவிக்கிறது. உடலுக்குள்ளேயே நியாயங்கள் நடைபெறவில்லை. வெட்கம் கெட்ட நாக்கு. 5 geir a som freqi gör (Self Consciousness) @uurrgarib, தியானம் இல்லை. புரட்டு. எண்ணப்பாடு- கூடியவவை விலக்கு (சொல்ல எளிது, ஆனால் மனதுக்கு எண்ணாமல், எண்ணி எண்ணித் தன்னைப் புண்ணாக்கிக் கொள்ளாமல்