பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 யந்திரங்களுக்கு என் பங்குத் தீனியை வாராவாரம், நேரத்தில் போட இயலுமா? பிடிகொடாமல் என்னத்தையோ முனகி விட்டு நழுவி விட்டேனானாலும் வெட்டென விட்டொழிக்க முடியவில்லை. விண் விண் பொறுக்காமல், ஒருநாள் எழுந்து உட்கார்ந்து முனைந்து எழுதத் தலைப்பட்டதன் விளைவாய் - சிந்தா நதி போன வருடம், கதிர் பொங்கல் இதழில் பெருக ஆரம்பித்து, வருடம் முடியப் பரவி நதி வற்றவில்லை. ஆனால் பத்திரிகைத் தொழிலில் வியாபார ரீதியில் ஸ்தாபனத்தின் செளகரியங்கள், சொந்தப் ப்ரச்சனைகள், அவ்வப்போது புதுமை ஏதேனும் செய்துகொண்டிருக்க வேண்டும் எனும் நிர்ப்பந்தங்கள்இவை எழுத்தாளனுக்கு முற்றிலும் புரியாது; புரிந்தாலும் அவைகளுடன் அவன் சமாதானமாக மாட்டான். கிடக்கட்டும். சிந்தா நதி என்கிற தலைப்பு, உள்ளத்தில் எவ்வாறு தோற்றம் கண்டது? வாரா வாரக் கட்டளைக்கு எவ்வாறு என் எழுத்துப் படிந்தது? நினைவு, எடுக்க எடுக்க அடியே காண முடியா இத்தனை பெரிய பேழையா? இன்னும் நான் மீளா வியப்புக்கள். ஆனால் எல்லாவற்றிலும் ஆச்சரியம், வாசகர்கள், ஆரம்பத்திலிருந்தே, இந்தத் தொடருக்குக் காட்டிய அமோகமான ஆதரவுதான்.