பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ காலத்தைப் போக்க இங்கு வரவில்லை. நீ காலத்தோடு போகவும் இங்கு வரவில்லை. நீ காலத்தை நிறுத்த வந்திருக்கிறாய். ஒரு கணத்தில் ஒரு யுகம் பண்ண வந்திருக்கிறாய். நீ நித்யன். ★ அனுமனுக்கு அவனை நினைவு மூட்ட அவனைச் சுற்றி இருந்தனர். அது அன்று. இன்று உன்னை உனக்கு நினைவு மூட்ட நீதான்; நீயேதான். உனக்கு நீதான் என்பதிலும் ஒரு பெருமிதம், இறுமாப்பு கண்டாயோ? உன் இறுமாப்பு, நீ விந்தியா. உன் பெருமிதம், நீ மேரு. நீ உன்னதன், உனை நீ மறவாதே. ★ காலம்?-நியமித்தே நீ -உன் சுண்டு விரலில் நீ சுற்றும் மோதிரம்