பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 : சிந்தாநதி குளிர்ந்த ஸ்ன்னமான காற்றின் நலுங்கலில், குரல் ஒருவிதமான அசரீரமும், அமானுஷ்யமும் கொண்டு, சினிமா பாட்டுத்தான்- (முகல்-இ-ஆஸாம்?) எங்களுக்கு எலும்பே கரைந்து விடும்போது. அவர் கண்களில் ஸ்படிகம் பளபளத்தது. இவன் யாவன்? இது பிறவி அம்சம், ஸாதக விளைவு ఆపుడు. இத்தனை வளங்கள் இவனுக்கு வழங்கியிருக்கும் இயற்கை, கூடவே வறளி விள்ளலால் தலையில் விதியை எழுதியிருப்பானேன்? அதுதான் ப்ரஞ்ச லீலா. அஞ்ஞாத வாசத்தில் நளன். இல்லை. அஞ்ஞாத வாசத்தில் அர்ச்சுனன். பிராசம் மட்டுமல்ல. பொருளிலும் பொருத்தமான அளபெடை அர்ச்சுனன்தான் சரி. இதுதான் என் இஷ்டம். போங்களேன்; கடைசி எடையில் இஷ்டம்தான் இலக்கணம். இலக்கணத்தையே மாற்றி அமைக்கும் இலக்கணம். - ஆபீசுக்குப் புறப்படத் தயாராகிக்கொண்டிருந்தேன். ? “ஸேட் கையோடு அழைத்துவரச் சொன்னார்.’ என்று பையன் வந்தான். அவர் வாசலில் கோலி விளை யாடும் பையன், போனேன். எனக்குக் கொஞ்சம் சிடு சிடுப்புத்தான். ஏற்கெனவே லேட்."