உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94சிந்தாநதி


பண்ணிக் கொண்டிருந்தாள். இது பெண். நறுவலாகத் தான் இருந்தது. இன்னும் ஆறு மாதம் ஆகியிருக்காது. என்னைப் பார்த்ததும் புன்னகை புரிந்தாள்.

"என் பெற்றோருக்கு நான் ஐந்தாவது பிறப்பு!" என்றேன். எங்கானும் ஆரம்பிக்கணுமே! முன்பின் பீடிகையில்லாமல், இதுவும் ஒரு 'பாணி'தான், இல்லை?

"அப்படியா? அப்போ தங்கள் குடும்பம்-" சட்டெனக் குழப்பத்தில் அவள் முகம் மாறியது. "இல்லை, தேவரீர் மூத்தவர்னு அவர்..” என்று இழுத்தாள்.

"நான் ஐந்தாவது என்று சொன்னேனே தவிர, எனக்கு முன்னதெல்லாம் தக்கித்து என்று சொல்லவில்லையே! அப்புறம்,திலோமம் பண்ணி, தவங்கிடந்து, விரதமிருந்து, ராமேசுவரம் போய் அடியேன் ராமாமிருதம், ஏன் பிறந்தேன்னு இருக்கு."

"அப்படிச் சொல்லக்கூடாது.' அவள் குரல் நடுங்கிற்று.

"தமாஷுக்குக் கூடச் சொல்லக் கூடாது!" என்று மீண்டும் அடித்துச் சொன்னாள்.

நான் தமாஷுக்குச் சொல்லவில்லை என்று அவள் எப்படி அறிவாள்?

"நான் சொல்ல வந்தது அது அல்ல. வேறு. நட்ட தெல்லாம் பயிரா? பெத்ததெல்லாம் பிள்ளையா?'ன்னு அம்மா சொல்வாள். அதையேதான் உன்னிடம் சொல்ல வந்தேன்."

அவள் புரிந்துகொண்டு விட்டாள். உடனேயே அவள் கன்னங்களில் வழிந்த கண்ணீர் எனக்குச் சற்று அதிசய மாகத்தானிருந்தது. ஆனால் நான் தொடர்ந்தேன்.

விடவில்லை.