பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4


இவ்வாறு எச்சமயத்தவர் தமிழ்த்தொண்டுக்கும் சளைக்காத தமிழ்ப் பணியை இஸ்லாமியப் புலவருலகம் ஆற்றியிருந்தும் அதன் சிறப்பையும் பெருக்கத்தையும் தமிழ் மக்கள் உணர்ந்து தெளிய வழியில்லாது. இஸ்லாமியத் தமிழ் புலவர்களும் அவர் தம் படைப்புகளும் காலத்தால் மறக்கப்பட்டிருந்த நிலைமை இன்று விரைந்து மாறத் தொடங்கியுள்ளது. மறக்கப்பட்ட இஸ்லாமியத் தமிழ் இலக்கியச் செல்வங்களைத் தேடி மக்களிடையே உலவச் செய்யும் பெரும் பணியில் தமிழ்ப் புலமையுலகம் முனைந்து செயல்படத் தொடங்கியுள்ளது. அதன் விளைவே உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கருத்தரங்கு மாநாடுகளும் விரைந்து வெளிவரும் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மறு வெளியீடுகளும் மதுரைப் பல்கலைக்கழகத்தில் உருவாகியுள்ள இஸ்லாமிய இலக்கிய ஆராய்ச்சிக்கான தனி இருக்கையும் ஆகும்.

இத்தகைய விழிப்புச் சூழ்நிலைக்குக் கட்டியங்கூறும் வசையிலேதான் 1976 ஆம் ஆண்டில் விடுதலைத் திருநாளான ஆகஸ்ட் 15ஆம் நாளன்று சென்னைப் புதுக்கல்லூரியில் "சீறாப்புராணக் கருத்தரங்கு' சீரும் சிறப்புமாக நடந்து முடிந்தது.

உலகம் குறுகி வரும் இன்றைய நிலையில் மனித உள்ளங்களை நெருங்கி உறவாடி ஒன்றுபடுத்தும் ஆற்றல் இலக்கியங்களுக்கே உண்டு. ஒருமைப் பாடெனும் உயர் குறிக்கோளை மனித குலம் எளிதில் எட்டிப்பிடிக்க இலக்கியமே இணையற்ற சாதனம் என்பதை அறிவுலகம் தீவிரமாக உணர்ந்து வருகிறது.

'ஒரு சமயத்தைச் சார்ந்தோர் மற்ற சமயத்தவரின் இலக்கியத்தை விருப்போடு படித்து அதன் சிறப்புகளை" உளந்திறந்து பாராட்டிப் போற்றும் மனப் பக்குவம் என்று உருவாகிறதோ அப்போதுதான் உண்மையான ஒருமைப் பாட்டுணர்வு மக்களிடையே வலுவாகக் காலூன்ற முடியும் என்றார் மறைந்த மாமேதை அபுல் கலாம் ஆஸாத் அவர்