பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98


கொடையாளன் கீர்த்தி போல் கருமேகங்கள் பரந்தன என்கிறார் உமறுப் புலவர். கொடையாளன் கொடுப்பது போல் பொழிந்தன மேகம் என்கிறார் கம்பர்.

"உள்ளி உள்ளவெல் லாம் உவந்து ஈயும் அவ்
வள்ளி யோரின் வழங்கின மேகமே." [1]

என்பது கம்பர் பாடல்.

மழையின் விளைவால், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அவ் வெள்ளப் பெருக்கைப் பலபட வருணித்திருக்கின்றனர். இவ்விரு பெரும் கவிஞர்களும். இக்கவிஞர்களின் கண்களுக்கு, அவ்வெள்ளப் பெருக்கு விலைமகளாயும், வணிகராயும் தோன்றுகிறது. மலையின் முடி, நடு, அடி ஆகிய பகுதிகள் வழியாய்ப் பாயும் வெள்ளம், மலையிடத்து உள்ள பொருள்களையெல்லாம் அடித்துக்கொண்டு செல்கின்றது. வருவோரின் தலை, ஆகம், தாளைத் தழுவிப் பொருளைக் கொள்ளை கொள்ளும் விலைமகளிரின் செயலாகப் படுகிறது, அவ்வெள்ளத்தின் செயல் கவிஞருக்கு.

"தலையும் ஆகமும் தாளும் தழி இயவே
நிலைநி லாதுஇறை நின்றது போலவே
மலையின் உள்ளவெலாம் கொண்டு மண்டலாவ்
விலையின் மாதரை ஒத்தது அவ் வெள்ளமே."[2]

என்பர் கம்பர்.

"மலையெனும் அரசன் புயங்களைத் தழுவி
மகிழ்ச்சிசெய் தவனுழைச் சிறந்த
நிலைகெழு பொன்னும் உரக செம் மணியும்
நித்தில ராசியும் கவர்ந்து
தொலைவிலப் பண்டம் அனைத்தையும் வாரிச்
சுருட்டியே எல்லைவிட் டகலும


  1. 1. கம்ப, பாலகாண்டம். ஆற்றுப் படலம் பா. 16
  2. 2. கம்ப, பாலகாண்டம். ஆற்றுப் படலம் பா. 18