பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

103


"கடலினை கலையைக் கதிர்மதி யுடுவைக்
ககனமற் றறுஷொடு குறுசைப்
புடவியைச் சுவனப் பதியினை யமரர்
பொருந்திட மடுக்கடுக் கவையை
வடிவுறத் தனத பேரொளி யதனால்
வருத்துவெவ் வேறென வமைத்தே
உடலினுக் குயிராய் உயிரினுக் குடலாய்
உறைந்தமெய்ப் பொருளினைப் புகல் வாம்."[1]

என்ற இப்பாடலில் இயற்கைச் சக்திகள் அனைத்துமாயும் இறைவனே இரு ப்பதை உமறு கூறியிருக்கிறார். அவற்றுள்ளும் இறைவனின் அருட்பேரொளி நிலவே ஆகும். புனிதர் முகம்மதுவின் முகத்தை மதியோடு உவமித்துக் கூறி, உவகையுறுகிறார் உமறு.

"பெருகிய கோடிசந் திரப்பிர காசமாய்
வருமொரு பெருங்கதிர் மதியம் போலவே
கருணைவீற் றிருந்தசெங் கமலக் கண்ணினைத்
திருநபி வருமல தாரஞ் செப்புவாம்"[2]


உலகமே இறியாமை இருளில் மூழ்கி, மயங்கிக் கிடந்தது, இருளகற்றி, ஒளியைப் பாய்ச்ச மறுவிலா தெழுந்த முழுமதி யாய் வந்து தோன்றினர் முகம்மது.

"நெறிநிலை திரியா மருண்மத மிகுந்து
   நெடுநில மெங்கணும் பரந்து
துறவறந் தவறி இல்லறம் மடிந்து
   சுடரிலா மனையது போலக்
குறைபடுங் காலம் இருளெனும் குபிரின்
   குலமறுத் தறநெறி விளக்க
மறுவிலா தெழுந்த முழுமதி போல
   முகம்மது நபிபிறந் தனரே."[3]


  1. 1. சீறா. கடவுள் வாழ்த்து 4
  2. 2. சீறா, நபியவதாரப் படலம் 1
  3. 3. சீறா. நபியவதாரப் படலம் 91