பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5


சள். அவர் தம் கனவைப் பூரணமாகத் தமிழகம் ஒன்று நிறைவேற்றி வருகிறது கம்பரமாயணம் போன்ற இலக்கியச் செல்வங்களை இஸ்லாமியத் தமிழறிஞர்களும் சீறாப் புராணம் போன்ற இஸ்லாமியக் காப்பியங்களை முஸ்லீமல்லாத பிற சமயத் தமிழறிஞர்களும் ஆராய்ந்து போற்றும் இனிய சூழலை தமிழ் நாட்டிலே இன்று காண்கிறோம்.

இஸ்லாமிய இலக்கியமாயினும் அல்லது வேறு எந்தத் சமயச் சார்புள்ள இலக்கியமாயினும் அதிலுள்ள சமயக் கருத்துக்கள் வேண்டுமானால் அந்தந்தச் சமயங்களுக்குச் சொந்தமானதாக இருங்கலாம். ஆனால். இலக்கியம் என்ற அளவில் அவை உலகத்துக்குச் சொந்தம், மனிதகுலம் முழுமைக்குமான பொதுச் சொத்து.

கருத்தரங்கு வெற்றிக்கு மூலவர்களாக விளங்கியவர்கள் ஆய்வாளர்கள் ஆவார்கள். முதுபெரும் தமிழறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி, சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை தலைவர் டாக்டர் சி பாலசுப்பிரமணியம், பெரும் புலவர் பேராசிரியர் சி.நயினார் முகம்மது, கலைமாமணி கவி கா.மு. ஷெரீப். திரு இரா. முத்துருமாரசாமி. திருமதி கிருஷ்ணா சஞ்சீவி ஜனாப் ஜே.எம்.சாலி, சிலம்பொலி செல்லப்பனார். பேராசிரியர் க.ப. அறவாணன். தக்கலை எம் எஸ்.பஷீர் போன்றோர் எனது நோக்கை நன்குணர்ந்தவர்களாக மனமுவந்து ஒத்துழைப்பு நல்கியதோடு அரிய ஆராய்ச்சிக் கட்டுரைகளைக் கருத்தரங்கில் படித்துப் பெருமைப்படுத்தினார்கள். இவர்கட்கு என்றும் நான் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளேன்.

எனது இலக்கிய முயற்சிகளுக்குப் பேராதரவு காட்டி வரும் பெருந்தகை அல்ஹாஜ் ஆ.க. அ. அப்துல் சமத் சாஹிப் அலர்கள் இந்நூலுக்கு அருமையான முன்னுரை எழுதியுள்ளார்கள்.

முதல் பதிப்பை விரும்பி ஏற்று ஆரவளித்த இலக்கிய ஆர்வலர்கள் இவ்விரண்டாம் பதிப்பிற்கும் நல்லாதரவு நகுவார்கள் என நம்புகிறேன்.

அன்பன்.

மணவை முஸ்தபா

தொகுப்பாசிரியர்