பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110


பிள்ளை யழுத பெரியோரை யென் சொல்ல
வள்ளல் வனம் புகுவான் என்றுரைத்தமாற்றத்தால்".[1]

"ஆவும் அழுத அதன் கன்றலர்ந்த கன்றவர்ந்த
பூவும் அழுதபுனதற் புள்ளழுத கள்ளொழுகும்
காவும் அழுத களிறழுத காலவயப்போர்
மாவும் அழுதன அம்மன்னவனை மானவே", [2]

இம்மரபினை அடியொற்றியே உமறுவும் தம் காவியத்தில் இயற்கை முகம்மதுவிற்கு ஏவல் செய்வதாகப் பாடியிருக்கிறார். அவர் அழைத்த உடனே நிலவும் தோன்றுகிறது; நிலவுடன் தோன்றுவதற்கு முன், கதிரவன் மறைதல் இயற்கை நியதி. இதோ கதிரவன் மறைவை வருணிக்கும் கவியின் பாடல்:

"எறிந்த வெண்டிரைக் கடல்முகட் டெழுந்துவிண்ணேகிச்
செறிந்த பார்மனுக் கடலினைக் கண்களாற்தெரிசித்
துறைந்த திண்கதிராயிரம் கரங்களு மொடுங்கிக்
குறைந்த கார்திகொண் டிரவிமேற் கடலிடைக்குதித்தான்"[3]

இவ்வாறு மறையும் இரவி, முகம்மது 'நிலவுடன் நீயும் இரு' என்று அண்ணல் முகம்மது கட்டளையிடுவாரானால் மறுக்க முடியுமா? நிலவும் இரவியும் ஒன்றாய் விளங்குவது இயற்கைக்கு மாறானதல்லவா! ஆகவே அத்தகு விந்தைக் கட்டளை, மனிதப் புனிதர் முகம்மதுவிடம் இருந்து எழு முன்னே மறைந்து விடுதல் நன்று என்று பரபரப்புடன் மறந்துவிடுகிறதாம் இரவி.


  1. 1. கம்ப. அயோத்தி நகர் தங்குபடலம் 100
  2. 2. கம்ப. அயோத்தி நகர் தங்குபடலம் 102
  3. 3. சீறா. மதியழைப்பித்த படலம் 43