பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முகப்பு

தாய்மொழிக்குத் தன்னேரில்லாத் சிறப்புக்கள் பல உண்டு. அவற்றின் ஒன்று;

உலகளாவிய சமயங்கள் பலவற்றின் அடிப்படையில் அளமந்த பெருங்காப்பியங்களை அது பெற்றிருப்பதாகும்.

சைவ சமயப் பெரிய புராணமும், வைணவ கம்ப ராமயணமும். சமண சமயச் சார்பான சீவக சிந்தாமணியும் பௌத்தம் தழுவிய மணிமேகலையும், கிறித்துவத் தேம்பாவணியும் அப்பெருங் காப்பியங்களில் சிலவாகும்.

இந்த வழிவாற்றில் இஸ்லாமிய நெறி சார்பாக இன்பத் தமிழில் விளைந்த செஞ் சொற் காப்பியம் "சீறாப்புராணம்" ஆகும்.

அரபு மொழியில் "சூறத்" என்றால் வடிவம் "சீறத்" என்றால் வரலாறு எனப் பொருள்படும்.

அகில உலகிற்கும் அருட்கொடையாக அருளப் பெற்ற அண்ணலார் நாயகத் திருமேனி முஹம்மது (சல்) அவர்களின் வரலாற்றை, காப்பிய வடிவில் தர முற்பட்டார் கவிஞர் உமறு, அது "சீறாப்புராணம்" என்னும் மாறப் புகழ்படைத்த காவியமாக உருப்பெற்றது.

பதினேழாம் நூற்றாண்டின் மத்தியில் நெல்லை மாவட்டத்தைச் சார்ந்த நாகலாபுரத்தில் நறுமணப் பொருட்கள் உற்பத்தி செய்து வழங்கும் வணிகக் குடும்பத்தில், செய்கு முஹம்மது அலியார் என்பவரின் வழித் தோன்றலாகப் பிறந்தவர் உமறு.

எட்டயபுரத்து அரசவைக் கவிஞராக விளங்கிய, கவிக் குயில் கடிகை முத்துப் புலவரிடம் தமிழ் கற்று பதினாறு வயதினிலேயே, வடநாட்டுக் கவிஞர் வாலை வாருதி என்பாரைத் தம் வாதத்தால் வென்ற காரணத்தினால் எட்டையபுரத்து அரசவைக் கவிஞராக ஏற்றம் பெற்றார் உமறு.