பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114


உயிறுந் தேன் வெள்ளமும், பலாவின் பசுங்கனிச் சுளை ஊற்றிலிருந்து ஓடிவரும் தேன் வெள்ளமும் சேர்ந்துடைப்பதாகப் பாடுகிறார் உமறு.

"படர்மருப் பெருமைக் குடம்புரை செருத்தற்
பருமுலைக் கண்டிறந் தொழுகி
நடைவழி சொரியும் அமுதமும் வாழை
நறுங்கனி உருத்தசெந் தேனும்
உடைபடு பசைப் பசுங்கனிச் சுளையில்
ஊற்றிருந் தோடிய தேனும்
கடிமலர் போர்த்த வரம்பினைத் தகர்க்கும்
கழனியிற் பரந்துபாய்ந் துடைக்கும்".[1]

இன்னும் உமறு,

"ஏல வார்குழற் கிடுபுகை மஞ்சினோ டிகலும்
சோலை வாய்தொறும் முக்கணித் தேன் மழைசொரியும்
மாலை வாய்தொறும் சுரும்புடைத் தாறெடுத் தோடும்
நீல வாய்மலர் வாவிகள் பெருங்கடல் நிகர்க்கும்". [2]

என்றும்,

"அருமறை நெறியும் வணக்கமும் கொடையும்
அன்புமா தரவுநல் லறிவும்
தருமபூம் பொறையும் இரக்கமும் குணமும்
தயவும்சீ ரொழுக்கமும் உடையோர்
பெருகிய செல்வக் குடியொடு கிளையும்
பெருந்தினி திருந்துவாழ் வனபோல்
மரும ர்ப் பழனக் காடெலாம் நெருங்கி
வளர்ந்தது நெட்டிலை நாற்றே"[3]


  1. 1. சீறா. நாட்டுப் படலம் 2
  2. 2. சீறா நாட்டுப் படலம் 54
  3. 3. சீறா நாட்டுப் படலம் 28