பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

119

islam என்னும் நூலின் (8 ஆம் பக்கத்தில் உள்ள) அடிக் குறிப்பொன்றில் நபிகள் பெருமானார் (சல்) அவர்கள் பிறந்த ஆண்டு 'கிஸ்றா அனுசர்வான் ஆட்சியின் 40 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதி' என்றும், 'செலுக்கஸ் ஆட்சியின் 880 ஆண்டின் இறுதிப் பகுதி'என்றும் குறிப்பிட்டுள்ளமை ஈண்டு நோக்கற்பாலது.

இந்த ஆண்டு 'ஆமுல் பீல்' என்றும் வழங்கப்படுகிறது இதன் கருத்து யானை வருடம் என்பதாகும்.அப்றஹா என்ற யெமன் நாட்டு அபிஸீனிய ஆளுநர் கஃபத்துல்லாவை அழிக்கும் நோக்கத்துடன் யானைகளுடன் வந்து அழிந்து போன சம்பவத்தைக் குறிக்கும் முகமாகவும் முதன் முதலில் மக்காவில் யானைகள் காணப்படடமையாலும் இந்த ஆண்டு, யானை வருடம்' என வழங்கலாயிற்று. அந்த யானை வருடத்திலே தான் நபிகள் பெருமானார் (சல்) அவர்கள் பிறந்தார்கள் என்று சீறாப்புராணத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

'கரைத்த மின் றெளித் தெழுந்தெனச் சிறக்குமக்காவி
விரைத்த கார்க்குலத் திரண்டெனக் களிறுகணெருங்கி
யிறைத்த டர்ந்தமும் மதங்களை வாரி நின் றிறைத்து
வரைக்கு லங்கள்போல் வந்ததற் கொடுமுதல் வருடம்,[1]

நபிகள் பெருமானார்(சல்) அவர்கள் கி பி 507 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 20 ஆம் தேதி அன்று பிறந்தார்கள் என்று பெரும்பான்மையான வரலாற்று ஆசிரியர்கள் ஒப்புவர். அண்ணல் நபி (சல்) அவர்களின் பிறப்பு அப்றஹா மக்காவை ஆக்கிரமித்த அதே நாளிலே நிகழ்ந்தது என்று சிலர் கூறுவர். இது நிகழ்ந்தது அப்ரஹா மக்காவை ஆக்கிரமித்து பன்னிரண்டு நாட்களிலென்றும் நாற்பது நாட்களிலென்றும்


  1. 1. சீறா. நபியவதாரப் படலம் 15