பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

121


வேதமொன் றணுகாச் செமுறத் துலுஸ்தானெனுமொரு தலத்திரி னடுவே
மாதவ ரபித்தா லிபுதிரு மனையின் முகம்மது நபிபிறந்தனரே..."[1]

நபிகள் பெருமானர் (சல்) அவர்கள் தங்களது இளம் பிராயத்திலே சிரியாவிலிருந்து வரும் பொழுது ஒர் சொல்லனின் உலைக் கூடத்தில் தங்கினார்கள். முகம்மது நபி (சல்) அவர்களிடம் அவர்கள் தம் தலைமுறைப் பெயர், ஊர்ப் பெயர் முதலியவற்றை அக்கொல்லன் கேட்டான். அவர்களும் உரிய பதிலை அளித்தார்கள். அந்தப் பதிலில் நபி கள் பெருமானார் (சல்) அவர்களின் ஊர்ப்பெயரும் மூதாதையரின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன. கிலாப் என்பவர் மூதாதையர் என்றும் அவருடைய புதல்வன் சூசை என்பவர் என்றும் அவருடைய வழித்தோன்றல் அப்துல் முனாப் என்றும் அவருடைய புதல்வன் ஹாசீம் என்றும் அவருடைய புதல்வன் அப்துல்லா முத்தலிபு என்றும் அவருடைய புதல்வன் அப்துல்லா என்றும் அப்துல்லாவின் புதல்வர் தாம் என்றும் தங்களது பெயர் முகம்மது என்றும், நபிகள் நாயகம் (சல்) அவர்கள் கூறினார்கள். இக்கூற்றினையே உமறுப்புலவர் இவ்வாறு அமைத்துப் பாடியுள்ளார்.

"மக்க மூர்கிலா பருள்குசை யப்துல் முனாபிக்
ககக மானஹா சீமுத லப்துல் முத்தலிபு
தக்க மன்னவர் மைந்தரி லப்துல்லா துவத்தான்
மிக்க னென்பெயர் முகம்மது வெனவிளம்பினரே", [2]

பின்னர் ஊசா என்னும் முதிய அறிஞருக்குத் தங்களைப் பற்றிக்கூறுகையில் தங்களின் கிளை அதுனான் கிளை என்றும் தங்களின் குலம் ஹாசீம் குலம் என்றும் தங்கள் பிதிராநிலை


  1. 1. சீறா. நபியவதாரப் படலம் 90
  2. 2. சீறா. ஊசாவைக் கண்ட படலம் 13