பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

123

அம்மாரையும் பெற்றெடுத்த தன்மை பற்றி, "குயின் மொழி ருச்சையாவை யீன்றும் முல் குல்துமை யின்று" என்று இரண்டாம் செய்யுளின் முதற் பகுதியிலும் அவர்களின் ஆண்பிள்ளைகளான காசீம், தையிப், தாகிர் என்பவர்களைப் பெற்றெடுத்தமை பற்றி,

"செயிர றநா லாவதிலாண் பிள்ளைகா சீமெனவோர் செம்ம லீன்று
நயமுறப்பின் தையிபெனுஞ் சேயீன்று தாகிறைவு நல்கினாரே"

என்று இரண்டாம் செய்யுளின் பிற்பகுதியிலும் விவரித்த உமறுப்புலவர் பாத்திமா நாயகி பிறக்கும் பொழுது அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வயது முப்பதைந்து என்றும் இப்பூவுலகத்திலுள்ள பெண்களுக்கும் சுவர்க்க லோகத்தில் உள்ள பெண்களுக்கும் எந்நாளும் அரசென்று விளங்க பாத்திமா நாயகி (றலி) அவர்கள் பிறந்தார்கள் என்றும் சஃபத் துல்லா வரலாற்றுப் படலத்தில் உள்ள மூன்றாம் செய்யுளில் இவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளது.

"மன் றல் கமழ் முகம்மதர்க்கை யேழாண்டு
நிறைந்த பின் மறுவிலாத
மின்றவழ்வ தெனவொளிருங் கதீஜாதா
யுகிதரம் விளங்கச் சோதி
துன்றுமணி யெனப்பூவின் மடைந்தயர்க்குஞ்
கவன பதித் தோகைமார்க்கு
மென்றுமர செனவிருப்பப் பாத்திமா
வெனுமயிலை யீன்றா ரன்றே."

மக்கமா நகரில் அமைந்துள்ள புனித கஃபத்துல்லா அமைக்கப்பெற்ற வரலாறு கஃபத்துல்லா வரலாற்றுப் படலத்தில் விவரிக்கப்பட்டுள்ளது, இப் படலத்தில் உள்ள 6ஆம் 7ஆம் .செய்யுளில் ஆ தி பி த ா ஆதம் (அலை) அவர்கள் கட்டியமையும் 8ஆம் செய்யுளில் நூகு நபி (அலை) அவர்களின் காலத்தில் ஏற்பட்ட பிரளயத்தால் கஃபா இடிந்ததையும் 9ஆம் செய்யுளில் நெடு நாட்களுக்குப் பின்னர் நூாகு நபி (அலை) அவர்களின் பதினொரா