பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126


அடுத்த நாளிரவிலும் ஜிபுறீல் (அலை) அவர்கள் வந்தார்கள் என்பதை 'மற்றைநாட் பருதி ராவில் கிறாமலையிடத்தில்' (41) எனக் குறிப்பிடுகிறார். ஞாயிறு இரவையே 'பருதி ராவ்' என்கிறார். ஜிபுறீல் (அலை) அவர்கள் மீண்டும் அடுத்த நாள்-சங்கை பொருந்திய றபீ உல் அவ்வல் மாதம் பத்தம் நாள் திங்கட்கிழமை இரவில் ஹிறா மலைக்குகைக்கு வந்தார்கள் என்பது சீறாப்புராணத்தில் இவ்வாறு குறிப் பிடப்பட்டுள்ளது.

'வரிசைநேர் றபீவு லவ்வல் மாதமீ ரைந்து நானிற்

றெரிதர விளங்குந் திங்க ளிரவினிற் சிறப்பு மிக்கோ

னருளினில் ஜிபுற பீல்வந் தருவரை யிடத்தில் வைகுங்
வெதிர்ந்து நின்றார்"[1]

திருக்குர்ஆன் அருளப்பட்டது லைலத்துவ் கத்ர் இரவிலாகும். இந்த இரவு றம்ளான் மாதம் 27 ஆம் நாள் இரவு என்பதே பொதுவான நம்பிக்கை, றம்ளான் மாதத்தின் பிந்திய பத்து நாட்களில் வரும் ஒற்றை நாட்களின் இரவு என்றும் கூறுவர். 'றஹ்மத்துல் லில் ஆலமீன்' என்னும் கிரந்தத்தில் முதன் முதலில் திருக்குர்ஆன் அருளப்பட்டது றபீ உல் அவ்வல் மாதம் பிறை ஒன்பது திங்கட் கிழமை எனக் கூறப்படுகின்றது. இது கி.பி. 610 பிப்ரவரி 12 ஆம் தேதி என்பர். திருக்குர்ஆன் முதன் முதல் அருளப் பட்டது றபீ உல் அவ்வல் மாதம் 12 ஆம் நாள் என்று கூறுவாரும் உளர். ஆனால் உமறுப்புலவர் தமது சீறாப் புராணத்தில் றபீ உல் அவ்வல் மாதம் 10 ஆம் நாள் என்று குறிப்பிடப்படுவது ஈண்டு நோக்கற்பாலது. "ஒதுவீராக’ என்று கோன் கூறியதும் தங்களுக்கு ஒதத் தெரியாது என்று பெருமானார் கூறியதும் இவ்வாறு உரையாடல் மூன்று முறை


  1. 1. சீறா நபிப்பட்டம் பெற்ற படலம் 16