பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128


கள் என்பதனை '...அடல பூபக்கர். நல்லிய லொடுமிச லாத்தி னண்ணினார் (15) என்றும் சிறுவர்களுள் இஸ்லாத்தை முதன் முதலில் தழுவியவர் அலி (றலி) அவர்கள் என்பதனை,

"சுந்தரப் புலியலி யென்னுந் கோன்றலு வந்தனை செய்துதீன் வழியி லாயினார்."

என்றும் அடிமைகளுள் இஸ்லாத்தை முதலில் தழுவியவர் ஆரிதென்பவரின் புதல்வராகிய ஸைத் (றலி) என்பதனை,

"அடிமையில்.................

மிடலவர் சைதெனும் வீர கேசரி
யிடரறுங் கதியிசு லாத்தி லாயினார்"

என்றும் விவரித்துள்ளார். இவர்களைத் தொடர்ந்து இஸ்லாத்தைத் தழுவியர்களுள் குறிப்பிடத்தக்கவர்களுள் அப்துல் றகுமான் (றவி) அவர்களும் சுபைர் (றலி) அவர்களும் தல்ஹா (றலி) அவர்களும் சஹ்து (றலி) அவர்களும் உதுமான் (ரலி) அவர்களும் என்பதனை,

"கரும்பெனு நபிகலி மாவைக் காமுற
விரும்பிய பேர்களிற் றலைமை மிக்கவ
ரரும்புவிக் காசபு துற்றஃ மானுடன்
தரும்புகழ் சுபைறுதல் காவுஞ் சஹ்துவும்"

(23)

என்றும்,

"அருமறைப் பொருட்குரை யாணி யாகிய
வரிசைநன் ைெறியுது மானு மாசிலாத்
திரு நபி பெயர்க் கலி மாவைச் செப்பிய
பரிசனத் தொடுந்தனி பழகு நாளில்."

(24)

என்றும் உமறுப்புலவர் விவரித்துள்ளார். இவ்வாறு இவர் அனைவரும் இஸ்லாமியத் திருத்தொண்டர் முன்னணியில் நின்றனர். ஜிபுறீல் (அலை) அவர்கள் நபிகள் நாயகம் (சல்) அவர்களுக்கு தொழுகை நடத்தப்படவேண்டிய முறையைச் செய்து காட்டிக் கொடுத்தார்கள். இஸ்லாத்தைத் தழுவிய, அனைவரும் அதன்படி ஒழுகலானார்கள்.